முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, April 29, 2011

தங்கம் ஜெகதலப் பிரதாபன்


தம்பி ஆனந்தம் 70ம் ஆண்டு நிறைவடைகின்றார் என்றதும் எனது உள்ளத்தில் பசுமையான நினைவுகள்.  அவரைச் சிறுபிள்ளையாக முதன்முதல் கண்ட காட்சி கண்முன் தோன்றுகிறது.
1947ஆம் ஆண்டு என் தந்தையார் மழவராயர்,  மலாயாவில் வாழ்ந்தது போதும் எனக் கருதினார்,  தாய் நாடு திரும்ப அவாக் கொண்டார்.  எனவே நாங்கள் இலங்கைக்கு வந்தோம்.
இலங்கையில் மறவன்புலவு எங்கள் கிராமம்.  வானம் பார்த்த நெல் விளையும் பூமி.  வயல்களோடு ஆங்காங்கே தென்னையும் பனையும் வளர்ந்து காணப்படும்.  வயல்களின் நடுவே மண்மேடுகள்.  அம்மேடுகளில் அங்கொன்று இங்கொன்றாகக் குடிமனைகள் காட்சியளிக்கும். 
அறுவடைக்குப் பிந்திய காலங்களைத் தவிர எங்கள் வீட்டிற்கு வாகனங்கள் வர வழி கிடையாது.  வரப்பு வழியாக நடந்து சென்றால் சிறிது தூரத்தில் ஒரு வீதியை வந்தடையலாம். 
அந்தத் தெருவில் எங்கள் குலதெய்வமாகிய வள்ளக்குளத்துப் பிள்ளையார் கோவிலில் குடிகொண்டுள்ளார். கோவிலையடுத்து வள்ளக்குளம் என்ற அழகிய தாமரைத் தடாகம்,  கண்டவர் மனதைப் பரவசங் கொள்ளச் செய்யும்.  
கோவிலுக்கு அருகே எனது அப்பாச்சியின் (தந்தையின் தாயார்) ஒன்றுவிட்ட  சகோதரியும் அவரது ஒரே மகன் கணபதிப்பிள்ளையும் அவரது குடும்பத்தினரும் வசித்து வந்தனர்.
உறவுமுறையில் கணபதிப்பிள்ளை எனக்கு குஞ்சியப்பு (சித்தப்பா) ஆவார்.  முன்பு ஒரு முறை எனது மூத்த சகோதரி ஊருக்கு வந்தபொழுது மாம்பழங்கள் கொண்டுவந்ததால் கணபதிப்பிள்ளைக் குஞ்சியப்புவை  மாம்பழக் குஞ்சியப்பு என்று மூத்த அக்கா அழைத்ததால் நாங்களும் அவரை அவ்வாரே அழைக்கலானோம்.
ஒரு மாலைப்பொழுதில் மாம்பழக் குஞ்சியப்புவும் குஞ்சியாச்சியும் அவர்களது மூன்று பிள்ளைகளும் தின்பண்டங்கள் கொண்டு ஊருக்கு வந்துள்ள எங்களைக் காண வரப்புவழியாக நடந்து வந்தனர்.
தேவி,  சாந்தா என்ற இரு சகோதரிகட்கும் இடைப்பட்ட அருமையான பிள்ளை தம்பி ஆனந்தம். 
அப்பாவின் சாயலில் உடல் மெலிவு,  ஒடுக்கமான முகம்.  நல்ல நிறம்.  அப்பாவின் அதே புன் சிரிப்பு. இவையெல்லாம் ஒன்றினைந்து அமைந்த ஒரு அழகுச் சிறுவன் தம்பி ஆனந்தம். 
இன்று அவர் வளர்ந்து,  பேரப்பிள்ளைகளையும் கண்டு 70 ஆண்டுகள் நிறைவை எய்தியுள்ளார்.
தம்பியின் குணங்களை நோக்கும்பொழுது அவரது அன்பும், பணிவுமே என்னை முதற்கண் ஈர்த்தன. எவரோடும் அன்பாகப் பழகுவதும், மூத்தோரைக் கனம்பண்ணுவதும், அவர்களிடத்துப் பணிவாக நடந்து கொள்வதும் தம்பியின் இயற்கையான குணமாகும்.
அக்கா என்று அவர் என்னை அழைத்தால் மீண்டுமொரு முறை அழைக்கமாட்டாரா எனத் தொனிக்கும்.
 உற்றார் உறவினர், நண்பர் ஆகியோரின் தொடர்புகளை மேற்கொள்வதில் தம்பி அதி சிறந்தவர். எவ்வளவு இடைஞ்சல்களுக்கு இடையிலும் நேரத்தை ஒதுக்கி அவர்களைக் கண்டு நலன் விசாரித்துச் செல்லும் தன்மையவர்.
தமிழ் என்றால் தம்பிக்கு உயிர் என்றே கூறுவேன், எங்கள் நாட்டில் தனிச் சிங்கள மசோதா நிறைவேற்றப்பட்டபொழுது அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துத் தமிழுக்கு சம உரிமை வேண்டி நின்றவர்களில் தம்பியும் ஒருவராவார்.
தம்பியின் பிள்ளைகள் சிறுவர்களாக இருக்கும்பொழுது பள்ளியில் கற்பிக்கப்பட்ட ஆங்கில மழலைப் பாடல்களைத் தமிழாக்கம் செய்து சொல்லிக்கொடுத்தார் என நான் அறிந்ததுண்டு. தமிழறிவைப் பிள்ளைகளுக்கு ஊட்டுவதில் மிகவும் சிரத்தை கொண்டவர்.  
தமிழ்ப் பண்பாட்டைப் பேணுவதிலும் மிக்க அவாக் கொண்டவர் என்பதற்கு அவரது மகன்கூறிய ஒரு சம்பவம் சான்று.  
சென்னையில் ஒரு கலை கலாச்சார நிகழ்ச்சி. விழா மண்டபத்தில் தந்தை நிற்கிறார். மகன் பிஞ்ஞகன் மேலை நாட்டு உடை அணிந்து வருகிறார். தந்தை, வீட்டிற்குச் சென்று வேட்டி அணிந்து வா என்று கண்டிக்கிறார்.
இவ்வாறு நமது பண்டைய பண்பாடுகளில் நின்றும் வழுவாது தனது பிள்ளைகளிடத்தும் மிகவும் கட்டுபாட்டுடன் நடந்து கொள்வார்.
அவரது தமிழ்பற்றின் உச்ச நிலையாக அமைந்தது காந்தளகம். 
இலங்கையர் ஒருவர் தமிழ் நாட்டில் ஒரு தமிழ்ப் பதிப்பகத்தை அமைத்து, நவீன முறைகளைக் கையாண்டு அதன்மூலம் அவர் தமிழுக்கு ஆற்றும் சேவையைக் கண்டு இலங்கைத் தமிழராகிய நாம் பெருமை கொள்ளாது இருக்க முடியாது.
தம்பி ஆனந்தம் குடும்பத்தினருடன் சென்னையில் வாழ்ந்து வந்தார். 
1989-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் தல யாத்திரை செய்ய விரும்புகிறேன் என்று கூறிய பொழுது மறு சிந்தனையின்றி அகமகிழ்ச்சியுடன் என்னை வரவேற்றார்.
தம்பியின் மனைவியை நான் மச்சி என்று அழைப்பதுண்டு. தம்பி, மச்சி பிள்ளைகள், முருகா, பிஞ்சகன், கயல்விழி, சிவகாமி யாவரும் என்னை அன்போடு உபசரித்தனர். பிள்ளைகளுக்கு என்னை முன்பின் தெரியாது. எனினும் அவர்கள் என்னுடன் பழகியமை அன்பு பாராட்டியமை. வேண்டிய உதவிகளைச் செய்தமை யாவற்றையும் என்னால் மறக்கமுடியாது.
அவர்கள் இல்லம் இலங்கையிலிருந்து வரும் நண்பர்களுக்கும் உறவினர்க்கும் ஒரு சரணாலயமாக அமைந்ததெனின் அது மிகையாகாது.
 இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
என்ற வள்ளுவர் வாக்கிற்கிணங்க தம்பியின் குடும்பம் பண்பாட்டைக் கடைப்பிடித்து வருவோர்க்கு விருந்தோம்பி உபசாரம் செய்து வருகிறது.
எனது தல யாத்திரைக்கு ஒரு சீரானதும் செலவைக் கட்டுப்படுத்துவதுமான திட்டத்தைக் கச்சிதமாய் வகுத்து தந்தார். அவரிடம் காணப்பட்ட சமயோசித புத்தியும், திறமையுமல்லவா அவர் இலங்கை அரசாங்கத்திலும் FAO/UNஇலும் உயர் பதவி வகிக்க உதவின.
2005ம் ஆண்டு நான் சென்னைக்கு வந்தபொழுது குஞ்சியாச்சி மகனுடன் வாழ்ந்து வந்தார். தம்பியின் பிள்ளைகள் யாவரும் தத்தம் பருவத்திற்கேற்ப மணமுடித்துப் பெற்றார் மனைவிட்டுப் பறந்து சென்று பிற நாடுகளில் தம் கூடுகளை அமைத்துக் கொண்டனர். மச்சியும் ஒரு மகளுக்கு துணையாக அமெரிக்கா சென்றிருந்தார்.
குஞ்சியாச்சி நோயுற்றிருந்தார். தாய்க்குத் தனது கையால் உணவு சமைத்து வைத்து, தாயாரைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்திருந்த தாதியிடம் பொறுப்பை விட்டுக் காந்தளகம் செல்வார். மாலையில் வந்தவுடன் இன்முகத்துடன் தாயாரின் நலன் விசாரித்துவிட்டுத்தான் மற்றக் கருமங்களைத் தொடங்குவார்.
மகனைக் கண்டவடன் தாயின் முகம் ஆதவனைக் கண்ட தாமரை போல் மலரும். இராப்போசனத்தையும் தானாகவே செய்து பரிமாறுவார். அக்கா நான் அம்மாவை ஐந்து நட்சத்திர விடுதியில் வைத்துப் பார்க்கிறேன் என்று தம்பி கூறும்பொழுது தாயார் கண்ணைக் கூசிச் கூசிச் சிரித்து இன்புறுவார்.
தாயின் சிறந்த கோயிலில்லை என்பதற்கேற்ப தாயை தெய்வமாகவே மதித்து வந்தார். அவரின் மனங்கோணாது மி்க்க அன்போடு அவரது கடமைகளை அவர் இவ்வுலகைவிட்டு நீங்கும் வரை செய்வதோடு அவரது ஈமக்கிரிகைகளையும் செவ்வனே செய்து முடித்தார்.
பெற்றாருக்குச் செய்யும் தொண்டு மிகவும் மகத்தானது. கடமைக்காகப் பெற்றாரைப் பார்பப்பவர் பலர் ஆனால் தம்பி ஆனந்தம் தனது கடமையைக் கண்ணுங் கருத்துமாகக் கொண்டு அன்போடு ஆற்றிய உத்தம புத்திரன் ஆவார்.
தம்பி ஆனந்தம் நற்சுகத்துடன் நீடுழி காலம் நலமே வாழ எல்லாம் வல்ல வள்ளக்குளத்துப் பிள்ளையார் அருள் புரிவாராக.
ஆக்கம் : தங்கம் ஜெகதலப் பிரதாபன்.
11/l / BLOCK
GOVT FLATS
BAMBALAPITIVA
SRILANKA

பார்வதி அம்மாளுடன்


Global Peace Support Group-UK


I am much happy and privileged to write few words on Mr. Kanapathipillai Sachithananthan reaching his 70th birthday on 5th , December 2011. Sachi commonly known as Maravanpulavu Sachithananthan is a very simple but an acute sharp minded individual involving various complicated issues.
I think  he has taken to follow his late father, Mr. Kanapathipillai - who seemed to be a dedicated teacher and seems to have dedicated his teaching career on the improvement of the Tamil language and the religion.
So, no wonder, the son following his father, but quite interestingly Mr. Sachithanantan has taken the cause to much more and seems to have made great impact on the development of the religion in particular and the principle of Saiva Sithantham through various academic and religious organisations on a wider scale.
Mr. Sachithanaanthan, as I have known him as a scientist, as a academic, a professional/international expert etc.
 But I had the opportunity to watch him as a very simple person with sincere and dedicated individual with wider knowledge associated with high motivation towards the set task.
Through my experiences due to my profession as well as of my dedication to the human right advocacy on interacting and meeting with various nationalities with different calibers, Mr. Sachi greatly differs not only in his very simple looks with white attire but in many ways he is a bundle of knowledge backed by immense dedication and sincerity in his believes.
As the chairman of an International advocacy group on human rights - (Global Peace Support Group-UK) I came to know him through another friend.
 I was so surprised to listen to him, not only his wider knowledge but to hear that of his sincere friends whom are people of above in the ladder of the world's order and the community within the globe as politician/career diplomats, community leaders and various other statesmen all over  the globe.
I should record this that of his introduction of this on good faith gave me and my colleagues to exploit to the maximum of our intended purpose with very wider publicity throughout the globe and made a significant impact.
So, in my view   Mr. Sachithanantan through his deeds as demanded by the circumstances is an exemplary role model to many among persons who have taken up the identical tasks throughout the globe.
Finally, we do have some kind of definition of old age but in his history he has had many folds. So, let us all pray that there is a very important duty where he has to wait to see and that he should ensure that he lives up to enjoy the day of his people achieved their long waited aspirations and enjoy their freedom and to join the rest of the world.
                                                                                                         
K.Kunabalasingam       
6 Shelley Avenue
London E 12 6SW
United Kingdom
3rd March 2011

தமிழ்ச் சைவ இலக்கியங்களை இந்தி பேசும் மக்களுக்கு

இந்தி மொழி வழியாகத் தமிழ்ச் சைவ இலக்கியங்களை இந்தி பேசும் மக்களுக்கு வழங்கத் தொண்டாற்றி வரும் அறிஞர்களில் ஒருவரான மறவன்புலவு

க. சச்சிதானந்தன் அவர்களின் அறிமுகமும்,தோழமையும் எனக்கு வாய்த்த
பெரும் பேறுகளில் ஒன்றாகப் போற்றி மகிழ்ந்து வருபவன் நான்.
தமிழ்ச் சைவத் திருமுறைகளை இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும், ஆங்கிலம் மற்றும் உலக மொழிகளிலும் சிறந்த அறிஞர்கள் மூலமாக மொழிபெயர்ப்பு செய்து அவைகளை இணையம் மூலமாக உலகெங்கும் பரப்பும் மாபெரும் தொண்டினைச் சில ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.
அவரது மொழிபெயர்ப்புச் சேவை தொடர வேண்டும். அதன் மூலம் நமது சைவ இலக்கியங்கள் எல்லா மொழிகளுக்கும் செல்ல வேண்டும்.
இவர் பலதுறை வித்தகர் ஆவார்.
செறிந்த தமிழ்ப் புலமையும் ஆங்கிலப் புலமையும் பெற்ற திலகமாக அவர் ஆற்றிய பணிகள் அளவில்லாதனவாகும்.
பழகுவதற்கு இனிமையும் பண்பிற் சிறந்த பெரும்புலவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் அவர்களின் புகழை எல்லா மாநிலங்களும் நினைந்து போற்றுகின்றன.
இவர் சிறந்த ஈழத் தமிழர்.இவர் தூய தமிழில் பேசுவார். தன்னிடம் பணிபுரிபவர்களையும் நல்ல இனிய தமிழில் பேச வைக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.
பலன் கருதாமல் தம் அறிவுப் புலமையால் இலக்கியப் பாலம் அமைக்கும் பெரும்புலவர் ஐயா அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்.
                             
பேராசிரியர், முனைவர் என். சுந்தரம்,
ஓய்வுபெற்ற இந்திப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்,
10 பாலாஜி நகர், முதல் தெரு
விருகம்பாக்கம்
சென்னை--600092

அருட்செல்வர் நா. மகாலிங்கம்


தாங்கள் அன்புடன் அனுப்பிய தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் நகல் கிடைத்து விபரம் அறிந்தேன்.
பன்னிரு திருமுறைகளைத் தெலுங்குக்கு மொழி பெயர்க்கும் முயற்சி தொடர்பாக, திருமலை திருப்பதி தேவத்தானத்தில், பணியின் மீளாய்வுக் கூட்டம் நடைபெற்றதாகவும், திருமலை திருப்பதி தேவத்தான பொறுப்பில் இருக்கும் பல்வேறு பிரமுகர்கள் முன்னிலையில் 2095 தமிழ்ப் பாடல்கள், தெலுங்கு ஒலி பெயர்ப்பு மொழி பெயர்ப்பு என 1342 பக்கங்களில் இரு பகுதி கொண்ட ஒரு தொகுதியாக மீளாய்வுக் கூட்டத்தில் கொடுத்ததாகவும், தாங்களும், ஒருங்கிணைப்பாளர் திரு திவாகரும் தேவையான விளக்கங்களை அளித்ததாகவும், இரு பகுதிகள் கொண்ட  மொழி பெயர்ப்பு தொகுதியினை தவத்திரு குருமகாசந்நிதனானம் அவர்களின் திருக்கண் பார்வைக்காக அனுப்பி வைத்ததாகவும் உள்ள செய்தியறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
நாம் செய்யும் அறச் செயல்கள் தக்காரை சென்று அடையுமானால்,அது வானையும் சிறிதாக்கி வளர்ந்து நிற்கும், உயர்ந்து பரந்து நிற்கும்.
தங்களின் அரிய முயற்சியைப் பாராட்டுவதோடு, தங்களின் ஆற்றல் மிக்க செயல்களை தமிழ் கூறும் நல்லுலகம் என்று நினைவினில் வைக்கும் என்று கூறி, தங்களின் முயற்சி வெற்றி பெற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளை வணங்கி வாழ்த்துகின்றேன்.                                               

Friday, April 22, 2011

தமிழர் கடலில் நடப்பது என்ன? : சச்சி உடன் குரல் நேர்முகம் – பகுதி 1


செவ்வி: அண்ணாகண்ணன்
Maravanpulavu_Sachithananthanமறவன்புலவு க.சச்சிதானந்தன், பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.  கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர். இவரை 2011 மார்ச்சு 20ஆம் தேதி, சென்னையில் வல்லமை ஆசிரியர் அண்ணாகண்ணன், நேர்கண்டார்.
இந்திய மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதிகள், பாக்கு நீரிணை, மன்னார் குடா என அழைக்கப்பெறுகின்றன. இவற்றை இங்கே தமிழர் கடல் என்ற பொதுப் பெயரால் அழைக்கிறோம். இந்தத் தமிழர் கடலில் நடப்பது என்ன? என்பதை இந்த நேர்முகம், விரிவாக எடுத்துரைக்கிறது. இதன் முக்கியத்துவம் கருதி, இந்த நேர்முகத்தைச் சில பகுதிகளாக வெளியிடுகிறோம். இதன் முதல் பகுதியைக் கீழ்க்கண்ட தளத்தில்  கேட்கலாம்.
நேர அளவு: 24 நிமிடங்கள்
மெல்லிசை: வசந்தி சுப்பிரமணியன்
------------------

Arumuga Naavalar

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழியல், கருத்தரங்கு, தமிழ்த்துறை, சென்னைப் பல்கலைக் கழம், 15.3.2011, 1515 மணி, சமய மரபு, ஆறுமுக நாவலர்,

Arumuga Navavalar, the topic on which Maravanpulavu K. Sachithananthan spoke at the second session of the Seminar on Tamilology organised by the Tamil Department of the University of Madras at 1515 hrs on 15th March 2011. Random video clippings.

Sunday, April 10, 2011

எழுப தகவையை எட்டும் இளவலே!


கவிநாயகர் வி. கந்தவனம்

எழுப தகவையை எட்டும் இளவலே
உழுவ லன்பனே ஒப்பிற் பண்பனே
அழகன் அம்பலத் தாடு வான்கழல்
தொழுது வாழ்த்துவேன் துலங்கி வாழ்கவே!

அறிஞர் வாழ்பதி யாழ்ப்பா ணம்புகழ்
மறவர் திறத்தினை வையத் தவரெலாம்
அறியும் வகையிலே ஆன்ற பணிகளைக்
குறைவி லாதுசெய் குரிசில் வாழ்கவே!

ஐநா மன்றுமுன் அறிவை மதிக்கவே
பெய்யும் மழையெனப் பெருந்தொண் டாற்றினை
உய்ய ஈழத்துத் தமிழர்க் குதவினை
ஐய ஆண்டுபல் லாண்டு வாழ்கவே!

காந்த ளகத்தினால் கணினி முறையிலே
ஆய்ந்து பிழைகளை அகற்றி அழகுறத்
தீந்த மிழ்மொழி; சிறக்கப் பதிப்புகள்
ஈந்து வருமரும் ஏந்தல் வாழ்கவே!

அம்ப லத்திலே ஆடு மரனைமின்
னம்ப லத்திலே ஆட அழைத்தனை
பம்ப ரச்சுழல் வேகப் பாங்கினில்
வம்ப லர்பணி செய்வை வாழ்கவே!

அற்பு தத்திரு முறைமின் னம்பலம்
பற்பல மொழி யிற்ப தித்தவை 
உற்பவ இசைப் பண்ணில் ஒலிக்கவும் ;
பொற்பு றச்செயும் புனித வாழ்கவே!

தங்கம் போலவும் தமிழைப் போலவும்
கங்கை போலவும் கயிலை மேவுவான்;
அங்கண் அருளினால் அனைத்துச் செல்வமும்
தங்கச் சச்சிதா னந்தர் வாழ்வரே!