முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, April 29, 2011

தமிழ்ச் சைவ இலக்கியங்களை இந்தி பேசும் மக்களுக்கு

இந்தி மொழி வழியாகத் தமிழ்ச் சைவ இலக்கியங்களை இந்தி பேசும் மக்களுக்கு வழங்கத் தொண்டாற்றி வரும் அறிஞர்களில் ஒருவரான மறவன்புலவு

க. சச்சிதானந்தன் அவர்களின் அறிமுகமும்,தோழமையும் எனக்கு வாய்த்த
பெரும் பேறுகளில் ஒன்றாகப் போற்றி மகிழ்ந்து வருபவன் நான்.
தமிழ்ச் சைவத் திருமுறைகளை இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும், ஆங்கிலம் மற்றும் உலக மொழிகளிலும் சிறந்த அறிஞர்கள் மூலமாக மொழிபெயர்ப்பு செய்து அவைகளை இணையம் மூலமாக உலகெங்கும் பரப்பும் மாபெரும் தொண்டினைச் சில ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.
அவரது மொழிபெயர்ப்புச் சேவை தொடர வேண்டும். அதன் மூலம் நமது சைவ இலக்கியங்கள் எல்லா மொழிகளுக்கும் செல்ல வேண்டும்.
இவர் பலதுறை வித்தகர் ஆவார்.
செறிந்த தமிழ்ப் புலமையும் ஆங்கிலப் புலமையும் பெற்ற திலகமாக அவர் ஆற்றிய பணிகள் அளவில்லாதனவாகும்.
பழகுவதற்கு இனிமையும் பண்பிற் சிறந்த பெரும்புலவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் அவர்களின் புகழை எல்லா மாநிலங்களும் நினைந்து போற்றுகின்றன.
இவர் சிறந்த ஈழத் தமிழர்.இவர் தூய தமிழில் பேசுவார். தன்னிடம் பணிபுரிபவர்களையும் நல்ல இனிய தமிழில் பேச வைக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்.
பலன் கருதாமல் தம் அறிவுப் புலமையால் இலக்கியப் பாலம் அமைக்கும் பெரும்புலவர் ஐயா அவர்களை வாழ்த்தி மகிழ்கின்றேன்.
                             
பேராசிரியர், முனைவர் என். சுந்தரம்,
ஓய்வுபெற்ற இந்திப் பேராசிரியர், சென்னைப் பல்கலைக்கழகம்,
10 பாலாஜி நகர், முதல் தெரு
விருகம்பாக்கம்
சென்னை--600092

No comments:

Post a Comment