முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Wednesday, August 3, 2011

சாதனையாளர் சச்சி

சு.பொ.நடராசா
(அண்ணா தொழிலகம், இணுவில், இலங்கை)
ஈழத் மிழ் மண்ணில் தோன்றிய மண்ணின் மைந்தர்களில் இந்த நூற்றாண்டுச் சாதனையாளர் வரிசையில் மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்கள், முன்வரிசையில் வைத்து எண்ணப்படும் தமிழ்ப் ற்றாளர் என்பது எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவு என்பதில் ஐயமில்லை.
இவரின் தொடர்பு 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராச்சிக் கால மாநாட்டுக் காலத்தில் ஏற்பட்டு இன்று வரை தொடர்கின்றது. பேராசிரியர் சு.வித்தியானந்தனுடன் சேர்ந்து தமிழாராய்ச்சி மாநாட்டுப் பணிகளில் முன்னின்று உழைத்த வரலாற்றுப் பெருமை இவருக்குண்டு.
கலாநிதி மில்க்வைற் க. கனகராசா அவர்கள் மூலம் ஏற்பட்ட தொடர்பால் நானும் இம் மாநாட்டுக்குப் பங்களிப்புச் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டது. பண்பாட்டு ஊர்திகளின் ஊர்வலத்தில் எமது ஊர்தியும் பங்கு பற்றிப் பாராட்டைப் பெற்றமை வரலாற்றுச் செய்தியாகும்.
அப்போதுதான் தமிழ் மொழி, பண்பாடு, தமிழர் வாழ்வியல் பற்றிய இவரின் ஆழ்ந்து அகன்ற அறிவையும் பற்றையும் பணியினையும் நேரில் கண்டோம்.
தந்தை அறிவு மகன் அறிவு என்று முன்னோர் சொல்வதற்கு உதாரணமாக இவரைக் காண்கின்றோம். இவரின் தந்தை மறுவன்புலவு கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்கள், யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் ஸ்ரீகாந்தா அச்சகமும் புத்தக சாலையும் வைத்து, அமைதியான ஆழமான தமிழ்ப் ணி செய்தவர். அவர் தவம் இருந்து பெற்ற மைந்தன் சச்சி அவர்கள், பதிப்புத் துறையில் நவீன விஞ்ஞான நுட்பங்களைப் பயன்படுத்தி அதற்கு வாய்ப்பான இடமாகச் சென்னை மாநகரைத் தளமாகக் கொண்டு அரும்பெரும் சைவத் மிழ்ப் ணிகளைச் செய்து வருவது வரலாற்றில் பதிவு பெற்றுள்ள பெருமைக்குரிய செய்தியாகும்.
ணினித் மிழ் உருவாவதற்குப் பெரும் பங்களிப்புச் செய்து, புதிய புதிய கணினித் தமிழ் எழுத்துளைத் தமிழ்கூறும் நல்லுலகிற்கெல்லாம் பயன்பட வைத்த பெருமை இவருக்குண்டு.
கடந்த நூற்றாண்டில் ஈழத்தவர்களான ராவ்பகதூர், சி.வை தாமோதரம்பிள்ளை, நாவலர் பெருமான் போன்றோர் ஏட்டிலிருந்த தமிழ்ச் செல்வங்களை அச்சு வாகனமேற்றி வாழவைத்த பெருமைக்குரியவர்கள் அதே போன்று இந்த நூற்றாண்டில் நூல் வடிவிலிருந்த தமிழ்ச் செல்வங்களை இணையத்தளத்தில் ஏற்றி உலகின் எந்த மூலையில் உள்ளவரும் நினைத்தவுடன் பார்த்துப் பயன்பெற வைத்த பெரும் சாதனை படைத்தவர் இவர்.
சைவ சமயத்தின் பெரும் பொக்கிசமான பன்னிரு திருமுறைகளையும் தருமபு ஆதீனத்தின் உதவியுடன் இணையத்தளத்தில் ஏற்றிப் பார்த்துப் படிக்கவும், பண்ணுடன் கேட்கவும், பொருள் அறியவும், தமிழ் மொழியில் மட்டுமல்ல; ஆங்கிலம் முதலான பல மொழிகளிலும் பதிவு செய்து, காலத்தின் தேவை அறிந்து செய்த, காலத்தால் அழியாத இவரின் பணி, சைவத் மிழ் உலகம் வியந்து போற்றும் சாதனையாளர் சச்சி எனும் பெருமையை இவருக்குக் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து பணி செய்தாலும் ஈழத் மிழர் வாழ்வை வளம்படுத்த இவர் செய்த, செய்கின்ற பணிகள் ஏராளம். மிக நெருக்கடியான காலக்கட்டத்தில் தன் குல தெய்வமான மறவன்புலவுப் பிள்ளையார் கோயிலைப் புதுப்பித்து, தமிழ்நாட்டில் மாமல்லபுரத்திலிருந்து பிள்ளையார் சிலை கொனர்ந்து பிரதிஷ்டை செய்து, வழிபாட்டுக்கு வழிவகுத்த இவரின் பற்றுறுதி போற்றத்தக்கது.
போரனர்த்தங்களால் ஈழத்திலிருந்து இடம்பெயர்ந்து அகதிகளாகத் தமிழ்நாட்டுக்குச் சென்ற நம்மவர்களை அங்கு வாழ வைப்பதிலும் பெரும் பங்கு வகித்தமை யாவரும் அறிந்ததே.
தமிழ் வாழ்வையும், சைவ வாழ்வையும் தன்னிரு கண்கள் போல மதித்து நவீன விஞ்ஞான உத்திகளைப் பயன்படுத்தி என்றும் நின்று நிலவக்கூடியதான அரும்பெரும் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கும் சாதனையாளர் சச்சிக்கு ’சச்சி70’ எனும் மலர் வெளியிடப்படுவதும் அதில் எமக்குப் பங்கு பற்ற வாய்ப்புக் கிடைத்ததும் மகிழ்ச்சிக்குரியதே.

No comments:

Post a Comment