முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Saturday, May 7, 2011


சச்சிதானந்தன், க.
பிறப்புதி. பி. கார்த்திகை 1972 (05-12-1941), யாழ்ப்பாணம் மாவட்டம், தென்மராட்சிப் பிரிவு, மறவன்புலவு என்ற சிற்றூரைச் சேர்ந்தவர்;.
கல்வி மறவன்புலவு சகலகலா வித்தியாசாலை (1945-1948), யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1949-1959) மற்றும் சென்னை பச்சையப்பன் கல்லூரி (1959-1966) மாணவர்.
அறிவியல் முதுவல், விலங்கியல், (சென்னைப் பல்கலை, 1966), கலை முதுவல், தமிழ், சென்னைப் பல்கலை (1992): காரைக்குடி அழகப்பா பல்கலையில் ஆய்வியல் நிறைஞர் மாணவர்;
இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் (1963-64), இந்திய அரசு (1964-66), யப்பானிய அரசு (1969), யுனெஸசுக்கோ (1973), ஆத்திரேலிய விஞ்ஞானச் சங்கம் (1976) ஆகியவற்றின் புலமைப் பரிசில்கள் பெற்றவர்.
தொழில்எழுத்தர், இலங்கை அரசு (1963-64), யாழ்ப்பாணக் கல்லூரியின் பட்டதாரிப் பிரிவு விரிவுரையாளர் (1966), உள்ளூராட்சி அமைச்சர் மாண்புமிகு மு. திருச்செல்வம் அவர்களின் தனிச்செயலாளர் (1966), கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வு அலுவலர், (1967-1977), உடுவில் மகளிர் கல்லூரி உயிரியல் ஆசிரியர் (1977), யாழ்ப்பாணப் பல்கலைக் கழக விலங்கியல் விரிவுரையாளர் (1978-1979), 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகர் (1971, 1979-85),
காந்தளகம் (யாழ்ப்பாணம், சென்னை மற்றும் தமிழகத்தின் 24 இடங்களில் தமிழ்நூல் பதிப்பக மற்றும் விற்பனை நிலையங்களின்) உரிமையாளர் (1977-), இருப்பிலும் விற்பனைக்குமுள்ள 36,000 தமிழ்த் தலைப்புகளைத் தன்னகத்தே கொண்டு 62 நாடுகளில் வாடிக்கையாளருக்குத் தமிழ் நூல்களை விற்பனை செய்யும் உலகின் மிகப் பெரிய மின்னம்பலத் தமிழ்நூல் அங்காடி www.tamilnool.com (1999) யின் உரிமையாளர்.
தொண்டுஇலங்கை இந்து இளைஞர் பேரவைத் தலைமைச் செயலாளர் (1971-77), யாழ்ப்பாணம் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு இணைச் செயலாளர் (1974), தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுச் செயலாளர் (1977-1979, 1987-2001), தமிழர் விடுதலைக் கூட்டணிப் பொதுக்குழு உறுப்பினர், (1977-1979, 1986-1989), தமிழர் பொருளாதார இயக்கச் செயலாளர் (1977-79), அறவழிப் போரட்டக் குழு நிறுவனர் (1979), சீசெல்சு இந்துக் கோயில் சங்க நிறுவனர் (1984), அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளைத் துணைத் தலைவர் (1986), சிதம்பரம், தவத்திரு ஆறுமுகநாவலர் அறக்கட்டளை உறுப்பினர் (1987-90), உலக அமைதிப் படையின் இலங்கைத் திட்டத்துக்கான ஆலோசகர் (1995), சென்னை மத்திய சிறைவாசி (1997), இந்திய அரசின் நாடகற்று ஆணை பெற்றவர் (2000-), இந்தியத் தடா நீதிமன்றம் மூலம் கடவுச் சீட்டு முடக்கப் பெற்றவர் (2000-), உலகத் தமிழர் பேரமைப்பின் இலங்கை  இந்தியக் கூட்டமைப்புத் தலைவர் (2008).
விருது சென்னை, தலைநகர்த் தமிழ்ச் சங்கப் பாவேந்தர் நூற்றாண்டு விழா விருது (1992), உலகத் திருக்குறள் மைய விருது (1993), சிறந்த பதிப்பாளருக்கான சென்னைக் கம்பன் கழக விருது  (1996), மதுரைத் திருவள்ளுவர் சங்க விருது (1997), திருப்பூர் தமிழ்ச் சங்க விருது (2000-),  திருவாவடுதுறை ஆதீனம், சிவத் திருத்தொண்டர் விருது (2006), தமிழ்த் தொண்டுக்கான அறவாணன் விருது (2008) என்பன பெற்றவர்.
அறிவியல்:  பறவைகளே (1981), தமிழர் கால்வாய் (2007), கப்பல் ஓட்டுவோம் கால்வாயில், (2007), என்பன இவர் எழுதியன.
இலங்கை நிலவரை (1995), உலகம் நிலவரை (2003), திருநெல்வேலி மாவட்ட நிலவரை (2000). உலகெங்கும் தமிழர் - வரைபடம் (2006) ஆகியனவற்றின் பதிப்பாசிரியர்.
இவரது அறிவியல் ஆய்வுக் கட்டுரைகளில் பல, ஆங்கிலத்திலும் வேறு மொழிகளிலும் (தமிழ், யப்பான், அரபு, பிரஞ்சு, சுவாகிலி) வெளியாகியுள.
அரசியல்எனது யாழ்ப்பாணமே (1982), சிங்களவர் கொள்ளையடித்த தமிழர் நிலம் (1995), சிங்களக் கடற்படையின் அட்டூழியம் (2007), தமிழன் கால்வாய் (2006), கப்பல் ஓட்டுவோம் கால்வாயில் (2006) ஆகிய நூல்களின் ஆசிரியர். தமிழ்ஈழம் நாட்டெல்லைகள் (1977) நூலின் இணை ஆசிரியர். ஈழத் தமிழர் இறைமை (1977) நூலைத் தமிழாக்கிவர். யாழ்ப்பாணம் ஈழநாடு, உதயன், கொழும்பு வீரகேசரி, தினகரன், சுதந்திரன், தினக்குரல், டெயிலிநியூசு, சென்னை தினமணி, தி இந்து, சனசக்தி, தமிழ் ஓசை, அமுதசுரபி, கோலாலம்பூர் மலேசிய நண்பன், பாரிசு ஈழநாடு, என உலகளாவிப் பல்வேறு அச்சு ஊடகங்களில் கருத்துருவாக்கக் கட்டுரைகள் எழுதுபவர். தமிழீழத் தொலைக்காட்சி, சென்னைப் பண்பலை வானொலிகள், இலங்கை வானொலி, உரூபவாகினி, தமிழகத்துப் பொதிகை, சன், செயா, மக்கள், ஆத்திரேலிய, ஐரோப்பிய வட அமெரிக்கத் தொலைக்காட்சிகள் ஆய காணொலி ஊடகங்களில் அறிவியல் மற்றும் அரசியல் பரப்புரையாளர்.
சைவமும் தமிழும்தருமை ஆதீனப் பன்னிரு திருமுறைப் (18,900 பக்கங்கள், 16 பகுதிகளாக) பதிப்பின் அச்சிடல்-தயாரிப்பார். தேவாரத் திரட்டுகள், திருமுறை கையடக்கப் பதிப்புகள், அபிராமி அந்தாதி, பிள்ளையார் கதை, திருக்குறள் போன்ற சைவ சமய நூல்களின் வெளியீட்டாளர். பன்னிரு திருமுறையின் 18,246 பாடல்கள் அனைத்துக்கும் உரையுடனும் ஆங்கில மொழிபெயர்ப்புடனும் இசையுடனும், சமகாலத்தில் தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், தேவநாகரி, அரபி, தாய்லாந்து, பர்மியம், யப்பான், ஆபிரிக்கான்சு, கிறியோல், பிசின், மலாய், இந்தோனீசியன், சுவாகிலி, உருசியன், ஒலிக்குறி உரோமன், ஆங்கிலம் ஆய வரிவடிவங்களுக்கு ஒலிபெயர்த்துத் தருவதுமான மின்னம்பல தளத்தின் www.thevaaram.org (2006) அமைப்பாளர்.

No comments:

Post a Comment