முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 6, 2011

உள்ளொன்று வைத்து புறமொன்று கலவாத உறவு




திருமுறைகளை உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்வதில் இமாலய சாதனை புரியும் எங்கள் ஐயா திரு.மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்கள் அகவை எழுபதை எய்தியதையிட்டு மகிழ்ச்சி. இந்த எழுபதிலும் இளைஞனப் போல் சுறுசுறுப்புடன் உலக நாடுகள் எங்ஙனும் சென்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும்திருமுறைகளை மொழிபெயர்க்க வேண்டும் என்ற அவாக் கொண்டு அவர் செய்யும் பணி வேறு எவராலும் எண்ணியும் பார்க்க முடியாதது. அத்தனை மகாத்தான பணியை அவர் இந்த வயதிலும் செய்து வருகின்றார்.அத்துடன் "நல்ல தமிழ்" நூல்களையும் வெளியிட்டு தமிழுக்கும் சேவை செய்கின்றமையை பாராட்டாமல்இருக்க முடியாது.

சேவை செய்வதற்கு வயதும் காலமும் தேவையில்லை. ஆனால் அதற்குப் பொதுநலமும் அதாவது தன்னலமற்ற தன்மையும், நேரமும், பணமும், முயற்சியும் அத்தியவசியமாகிறது. இந்த வயதிலும் ஐயா அவர்கள் தனது உடல் நிலையைக் கருத்தில் கொள்ளாது, நேரங்காலத்தைப் பாராது, பணச் செலவையும் பொருட்படுத்தாது, "பசிநோக்கார் கண் துஞ்சார் கருமமே கண்ணாயினார்" என்பதற்கிணங்கத் தான் மேற்கொண்டபணியை நிறைவேற்றி வருகின்றார்.
சேவை செய்வது பட்டம், பதவி, பாராட்டுக்களை எதிர்பார்த்து, நான் அப்படி ஒன்றையும் எதிர்பார்க்கவில்லை என்று சிலர் கூறுவார்கள். ஆனால் மறைமுகமாக அவர்கள் உள்ளத்தில் அஃது இருக்கும்.
ஆனால் மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஐயா அவர்களிடம் இந்த எண்ணத்தை நான் சிறிதளவேனும் கண்டிலேன். 'பணி செய்வதே என் கடன்' -- 'பணியைச் செய் பலனை எதிர்பாராதே' என்ற வாசகங்களுக்கிணங்க ஓய்வு ஒளிச்சலின்றி அவர் ஆற்றிவரும் பணி அகில உலகிலும் நிலைத்து நிற்கும், அவரது மேன்மையை எடுத்தியம்பும் என்பதில் ஐயமில்லை.
பழகுவதற்கு இனிமையானவர், பழகும் போது சிறு குழந்தை போன்று உள்ளத்தில் உள்ளது அத்தனையையும் ஒளிவு மறைவின்றிக் கொட்டி விடுவதைக் கண்டு ஆனந்தித்தேன். உள்ளொன்று வைத்து புறமொன்று கலவாத உறவு வேண்டி நிற்கும் ஐயாவுடன் பழகக் கிடைத்ததை பெரும் பாக்கியமாகக் கருதுகின்றேன். அவருடைய தகுதிக்கு என்னுடன் அவர் சமமாகப் பழகும் தன்மையைக் கண்டு வியந்து போனேன்.
        அன்பாகவும் ஆதரவாகவும் பேசும் பாணி,
        மனந்திறந்து பாராட்டும் பண்பு,
        மனங்கோணாமல் குறைகளைச் சுட்டிக் காட்டும் தன்மை,
        அபிப்பிராயங்களை ஏற்றுக் கொள்ளும் பணிவு,
        கருத்துக்களைக் கூறும் போது அதிபதியாகும் தனித்துவம்,
ஆகிய விசேட பண்புகளின் காரணமாக ஐயா எனது இதயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கின்றார். இந்தப் பண்புகளில் இருந்து சிலவற்றையாவது நானும் கிரகித்துக் கொள்ளலாம் என்று அவாவுகின்றேன். உயர்குடிப் பிறந்தவருடன் உறவாடுவதில் நான் பெருமை கொள்கின்றேன்.
அதே வேளை பிழைகளைச் சுட்டிக் காட்டும் போது எதற்கும் தயங்காது ஒரு அதிபர் நிலையில் இருந்து எனது தவறுகளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். அவரது வழிகாட்டல்கள் என்னைச் சாதாரணமாக எழுதும் போதும் நல்ல தமிழை (வடமொழி கலக்காது) எழுத வைத்திருக்கின்றது. என்றால் அது ஐயாவுக்கு கிடைத்த வெற்றி என்றே கூறவேண்டும். அவருடைய வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் பெறக் கூடியவாறு ஐயா அவர்கள்நீண்ட ஆயுளோடு சுகதேகியாய் வாழவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
'இதனை இவன் செய்வான்' என்று அறிந்து அதனை அவரிடம் ஒப்படைத்த இறைவன் அவரது பணி இனிதுநிறைவேற எல்லா நலனையும் அருளையும் அளிப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
இவ்வண்ணம்
என்றும் அன்புடன்
'முகில்வண்ணன்'
வே. சண்முகநாதன்.
V. Sanmuganathan
(Mukilvannan)
Sri Lanka
+94 77 6078786
+94 67 2229948


No comments:

Post a Comment