பிரேமி முரளி
(மறவன்புலவு), இலண்டன்.
ஐயா, நீங்கள் இப்போ ஓடி ஓடிச் செய்யும் தொண்டுகளைப் பார்த்து 40 வயது என எண்ணினோம். ஆனால் எம் எழுத்தாளர் அவர்கள், தங்களுக்கு 70 வது வயது பிறந்த நாளுக்கு வாழ்த்து அனுப்பியதைப் பார்த்து நம்ப முடியவில்லை அங்கிள்.
வித்தியாசாகரின் வாழ்த்தைப் பார்த்தீர்களா? உங்கள் மேல் வைத்திருக்கும் அன்பைப் பார்க்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது. அவருடய எழுத்தைப் போல் மனமும் மிக உயர்ந்ததாக இருந்தது.
உங்களுக்கு நேரம் கிடைத்தால் அவருடய ஆக்கங்களையும் படிக்கவும். நீங்கள் தாய்லாந்தில் தயாரித்த திருவெம்பாவைப் பாடல் ஒலிபெயர்ப்பு நூல் பார்த்தேன்.
தேவாரங்களைத் தமிழ்ப் பிள்ளைகள் நேரம் உள்ளபோது இணையத் தளத்தில் கேட்பார்கள்.
என்றும் உங்கள் சேவை எமது சைவ சமயத்தவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்புடன்
பிரேமி முரளி, (மறவன்புலவு), இலண்டன்.
No comments:
Post a Comment