மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தாய்லாந்தில் 22.11.11 இனிமையான நாள். தாய்லாந்து அரசரின் பண்டிதர் அமைப்புக்குச் (The Thai Royal Institute) சென்றேன். அரச மாளிகைக்கு முன்னால் உள்ள கட்டடத்தில் அந்த நிறுவனம் அமைந்துள்ளது. தாய் மொழியை இலத்தீன் வரிவடிவங்களில் எழுதுவதற்கான உலகத் தரத்தைப் (ISO) பெற்ற அமைப்பு. பல்துறைப் புலமையாளர் பணிபுரியும் அமைப்பு. பண்டிதர் அமைப்பு எனத் தொடக்க காலத்தில் பெயர்பெற்ற அமைப்பு.
மொழியியலாளரைச் சந்திக்கலாமா என வரவேற்பறையில் உசாவினேன்.
சிறிது நேரத்தில் ஒருவர் வந்தார். நித்தியா காஞ்சனவான் அவர் பெயர்.
தமிழ் மொழியைத் தாய் மொழி வரிவடிவங்களில் எழுதும் வழி தேவாரம் தளத்தில் உள்ளதைச் சொன்னேன்.
தாய் மொழியை இலத்தீன் வரிவடிவத்தில் எழுதும் தரத்தை உருவாக்கிய குழுவில் தான் உறுப்பினர் என்றார்.
அடுத்துத் தாய் மொழியைத் தேவநாகரி வரிவடிவத்தில் எழுதும் தரத்தை உருவாக்கி வருவதாகச் சொன்னார். அதற்கான வெளியீடு ஒன்றையும் என்னிடம் தந்தார்.
அடுத்துத் தமிழைத் தாய் வரிவடிவத்தில் எழுதும் முயற்சியைக் கூறி, அந்த முயற்சியில் தவறுகள் இருக்கக்கூடும் என்பதால் திருத்தவேண்டும் உதவ முடியுமா? எனக் கேட்டேன். மிக ஆர்வத்துடன் உதவுவதாகக் கூறிய அவர், தமது தலைவரைச் சந்தித்துப் பேச நியமனம் பெற்றுத் தருவதாகக் கூறினார். நாளை அல்லது மறுநாள் சந்திக்கலாம் என்றார்.
சநதிப்புக்காகக் காத்திருக்கிறேன்.
==========================================
No comments:
Post a Comment