பிரான்சில் 25.9.2011 அன்று நிறைவுற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க11ஆவது அனைத்துலக மாநாடு, மறவன்புலவு க. சச்சிதானந்தன் அவர்களின் முன்மொழிவு:
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
உலகின் 29 அரசுகள் (அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள்(USA), அயர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை, கனடா, கிரேக்கம், சிங்கப்பூர், சீசெல்சு, சுரினாம், சுவாசிலாந்து, சுவிட்சர்லாந்து, சுவீடன், தென்னாபிரிக்கா, டென்மார்க்கு, நியுசிலாந்து, நெதர்லாந்து, நார்வே, பிரான்சு, பிரிட்டன், பிசி, பெல்சியம், மலேசியா, மியான்மார், மொரிஷியஸ், ஜெர்மனி, வத்திக்கான்.) தமிழ் மொழி வளர்ச்சிக்கும் தமிழ்ப் பண்பாட்டுப் பேணலுக்கும் தத்தம் மக்கள் வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்குவதாலும், தமிழ் எண்கள், கலைச் சொற்கள், எழுத்துச் சீர்மை, எழுத்துக்கூட்டல் சீர்மை, ஒருங்குறிச் சீர்மை, ஒலிபெயர்ப்புச் சீர்மை, எழுத்துப் பெயர்ப்புச் சீர்மை, தமிழர் நாட்காட்டி, இடப் பெயர்ச் சீர்மை எனக் கடந்த 60-70 ஆண்டுகளில் எழுந்த வளர்ச்சி நோக்கிய ஒவ்வொரு சிக்கலும் தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் வந்த சிக்கல்கள் அல்ல என்பதாலும், உலகில் வளர்ச்சி நோக்கிய மொழியாளரும் இனக்குழுக்களும் எதிர்கொள்ளும் சிக்கல்களே அவை என்பதாலும், அவற்றைத் தீர்க்க உலகில் பல்வேறு சூழல்களில் மேற்கொண்ட முயற்சிகள் தமிழருக்கு வழிகாட்டி என்பதாலும்,
• இதய நோய்க் கலைச் சொற்களா? The International Working Group for Mapping and Coding of Nomenclatures for Pediatric and Congenital Heart Disease,
• உயிரிவேதியியல் பெயர்களா? Nomenclature Committee of the International Union of Biochemistry and Molecular Biology.
• உலளாவிய இடப்பெயர்களா? UN Group of Experts on Geographical Names (UNGEGN)
• தாவரவியல் பெயர்களா? International Code of Botanical Nomenclature,
• விலங்கியல் பெயர்களா? International Commission on Zoological Nomenclature,
• வேதியியல் பெயர்களா? IUPAC nomenclature of Chemistry
• வானத்தில் புதிதாகக் காணும் விண்மீன்களின் பெயரா? 1919 முதலாக இயங்கிவரும் International Astronomical Union (IAU) ,
இவ்வாறாகத் துறைதொறும் துறைதொறும் வளர்ச்சியை நோக்கிய சீர்மை, கட்டிறுக்கமாக அமைந்து வருதலையும் உலகமயமாகும் தமிழர் நிலையையும் நோக்கவேண்டும் என்பதாலும், சீன மொழியில் பெயரிடத் துறைதொறும் அனைத்துலக அமைப்புகள் உள என்பதாலும், எளிதாகக் கிடைக்கும் ஒப்பனைப் பொருளுக்குக் கூட பெயருக்குரிய அமைப்பு: Chinese Nomenclature of International Cosmetic Ingredients இருப்பதாலும்,
சீன மொழி உச்சரிப்புச் சீர்மைக்காக 1912-1913இல் அமைந்த ஆணையத்தைத் தொடர்ந்து நவம்பர் 23, 1918இல் சீன அரசின் ஆணையாகச் சுயின் புகாவோ என்று இன்று வரை வழக்கில் உள்ள சீர்மையான மண்டரின் சார் ஒலி அமைப்புத் தரமே உலகத் தரம் என்பதாலும், எழுத்துப் பெயர்ப்பு மற்றும் ஒலிபெயர்ப்புக்காகப் உலகத் தரங்கள் பின்வருமாறு:
• அரபி வரிவடிவ – உரோம வரிவடிவத் தரமாக ISO 233:1984, ISO 233-2:1993,
• அரபி வரிவடிவ, பாரசீக வரிவடில – உரோம வரிவடிவத் தரமாக ISO 233-3:1999,
• ஆர்மினியன் வரிவடிவ – உரோம வரிவடிவத் தரமாக ISO 9985:1996,
• இந்தியிலிருந்து உரோம வரிவடிவத் தரம் 1972இல் திரு. சர்மா விதந்துரைத்ததை ஐநா ஏற்றது,
• ஈபுறு வரிவடிவ – உரோம வரிவடிவத் தரமாக ISO 259:1984, ISO 259-2:1994,
• உருசிய சிரிலிக் வரிவடிவ – இலத்தீன் சார் வரிவடிவத் தரமாக ஐஎசோ9 (ISO 9),
• கிரேக்க வரிவடிவ – உரோம வரிவடிவத் தரமாக ISO 843:1997,
• கொரிய வரிவடிவ – உரோம வரிவடிவத் தரமாக ISO/TR 11941:1996
• சோர்சிய வரிவடிவ – உரோம வரிவடிவத் தரமாக ISO 9984:1996,
• தாய்லாந்து வரிவடிவ – உரோம வரிவடிவத் தரமாக ISO 11940:1998, ISO 11940-2:2006,
• தேவநாகரி வரிவடிவ – உரோம வரிவடிவத் தரமாக ISO 15919:2001
• மண்டரின் – உரோம வரிவடிவ உலகத் தரமாகப1982 முதலாகப் பின்யின் ISO 7098:1991,
• யப்பானிய வரிவடிவங்களை உரோம வரிவடிவங்களாக்க ISO 3602, உலகத் தரங்களாக அமைந்து வருவதாலும், அனைத்துலக அமைப்புகளுக்கு வழிகாட்டியாக, ஐநா ஆதரவு பெற்றவையாக, உலகமயமாகிய மொழிகளின் சீர்மைக்கு உதவுவதற்காக, மொழிவழி நாடுகளின் கூட்டமைப்புகளாக,
• பிரஞ்சு மொழி வழங்கும் 44 நாடுகள், Organisation internationale de la Francophonie
• அரேபிய மொழி வழங்கும் 22 நாடுகள் Arab League,
• இசுப்பானிய மொழி வழங்கும் 20 நாடுகள் Asociación de Academias de la Lengua Española,
• போர்த்துக்கேய மொழி வழங்கும் 11 நாடுகள் Comunidade dos Países de Língua Portuguesa,
• சுவாகிலி மொழி வழங்கும் 5 நாடுகள் East African Communityஎனவும் பிறவுமாக, தத்தம் மொழி, பண்பாடு, அடையாளம் பேணல் தொடர்பாக அரசுக் கூட்டமைப்புகளை வைத்திருப்பதும் யுனெசுக்கே (UNESCO) அவற்றுக்கு நிதி மற்றும் அமைப்பு ஆதரவு வழங்கி ஒருங்கிணைப்பதும் உலகமயமாகும் தமிழருக்கு முன்னோட்டங்கள் என்பதாலும்,தமிழக அரசானது, இந்திய நடுவண் அரசின் மூலமாக, யுனெசுக்கோ(UNESCO) அமைப்பு வழியாகத் தமிழ் வளர்ச்சிக்காகத் தத்தம் மக்கள் வரிப்பணத்திலிருந்து நிதி ஒதுக்கும் இந்தியா உள்ளிட்ட 29 அரசுகளின் கூட்டமைப்பாக உலகத் தமிழ்ச் சங்கத்தை நிறுவுமாறும்,
பிரஞ்சு மொழி வழங்கும் 44 நாடுகள், Organisation internationale de la Francophonie , அரேபிய மொழி வழங்கும் 22 நாடுகள் Arab League, இசுப்பானிய மொழி வழங்கும் 20 நாடுகள் Asociación de Academias de la Lengua Española, போர்த்துக்கேய மொழி வழங்கும் 11 நாடுகள் Comunidade dos Países de Língua Portuguesa, சுவாகிலி மொழி வழங்கும் 5 நாடுகள் East African Community போன்று 29 நாடுகள் கொண்ட கூட்டமைப்பான இந்த உலகத் தமிழ்ச் சங்கத்தை (Ulakath Thamizh Sangam) உருவாக்கி அமைக்க, யுனெசுக்கே (UNESCO) அமைப்புக்கு விதை நிதியாக பத்து இலட்சம் இந்திய ரூபாய்களைத் தமிழக அரசு இந்திய அரசு வழி வழங்குமாறும்,
மதுரையில் 1986இல் உலகத் தமிழ்ச் சங்கத்தை அப்போதைய முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஒதுக்கிய நிலத்தை 29 நாடுகளின் கூட்டமைப்பிடம் யுனெசுக்கோ (UNESCO) அமைப்புவழி வழங்குமாறும்,
அந்தக் கூட்டமைப்பின் வழியாக, தமிழ் எண்கள் சீர்மை, கலைச் சொற்கள், எழுத்துச் சீர்மை, எழுத்துக்கூட்டல் சீர்மை, ஒருங்குறிச் சீர்மை, ஒலிபெயர்ப்புச் சீர்மை, எழுத்துப் பெயர்ப்புச் சீர்மை, தமிழர் நாட்காட்டி, இடப் பெயர்ச் சீர்மை எனக் கடந்த 60-70 ஆண்டுகளில் எழுந்த வளர்ச்சி நோக்கிய ஒவ்வொரு சிக்கலுக்கும் உலகில் வளர்ச்சி நோக்கிய மொழியாளரும் இனக்குழுக்களும் பல்வேறு சூழல்களில் மேற்கொண்ட முயற்சிகளைப் போன்று உலகத் தமிழருக்கும் மேற்கொள்ளுமாறு 2042 புரட்டாதி, 7, 8 நாள்களில் பிரான்சு நாடு, எவ்விறி நகரில் கூடிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க 11ஆவது அனைத்துலக மாநாடு தீர்மானிக்கிறது.
=======================================
No comments:
Post a Comment