முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

வட கடல் மீனவர்களுக்கு வளமான எதிர்காலம்


வட கடல் மீனவர்களுக்கு
வளமான எதிர்காலம்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
கடலியல் ஆய்வாளர், ஐநா முன்னாள் ஆலோசகர்.

17.4.2011 அன்று, சிங்கள மீனவர் பதின்மரை ஆந்திரப் பிரதேசத்தின் மேற்குக் கோதாவரி மாவட்டத்திற்குக் கிழக்கே இந்தியக் கடலோரக் காவற்படை கைது செய்தது. இந்தியப் பொருளாதா வலையத்துள் மீன் பிடித்தார்கள் என்ற குற்றச் சாட்டில் கைது செய்தது. 
இலங்கை மீனவர், பல நாள்கள் கடலில் தங்கக்கூடிய மீன்பிடிக் கப்பல்களில் திருகோணமலையில் இருந்து புறப்பட்டு வடக்கே வங்காள விரிகுடாவில் இந்தியப் பொருளாதார வலையத்துள் வந்து மீன்பிடித் தொழில்செய்கின்றனர்.
அந்தக் கப்பல்களில், எரிபொருள், மின்சாரம், தொலைத்தொடர்பு, புவிநிலைஅறிகருவிபொழுதுபோக்குக்காணொலி, கேட்பொலி, உலக வானொலிதங்கும் வசதி, கழிப்பறை வசதி, சமையல் வசதி, சமைக்க மளிகைப் பொருள்கள், ஆழ்கடல் மீன்பிடி வலைகள், பனித்தண் களஞ்சியங்கள், தப்ப மிதவைகள், தப்பப்படகுகள்,  என 15 அல்லது 20 மீனவர், மீனவர் தலைவர், கப்பல் ஓட்டுநர் தலைவர், எந்திரத் திருத்துநர் என மீன்பிடிப்படை ஒன்று பயணிக்கிறது.
வங்காள விரிகுடாவுக்குள் இந்தியப் பொருளாதார வலையத்துள் இலங்கை மீன்பிடிக் கப்பல் வரவு அண்மைக் கால உள்ளீடு.
30 ஆண்டுகளுக்கு முன் இருந்தே இந்தியப் பொருளாதார வலையத்துள் மீன்பிடிக்க வரத் தொடங்கியோர் தாய்லாந்தவர், பின்னர் தாய்வானியர், அப்பப்போ யப்பானியர், பிரஞ்சுக்காரர். அவர்கள் தொடர்ந்தும் வந்துகொண்டிருக்கிறார்கள்.
செயற்கைக்கோள் வழி மீன்பெயர்ச்சி, மீன்கூட்டம், காலநிலை பற்றி, அந்த அந்த நாட்டு அரசுகளே மீனவருக்குத் தகவல் சொல்ல, பன்னாட்டு மீனவக் கப்பல்கள் பொலிந்த கடலாக வங்காள விரிகுடா.
இந்தியக் கடல் எல்லையின் நீளம் றத்தாழ 7,500 கிமீ. இந்தியப் பொருளாதா வலையத்தின் பரப்பளவு 21,72,000 சதுரகிமீ. கீழுள்ள வரைபடத்தில் நீல வண்ணத்தில் இந்தியப் பொருளாதார வலையப் பகுதிகள்.

தமிழகக் கடல் எல்லை நீளம் 1076 கிமீ. அதில் வடகடலின் கரை நீளம் 50.6% அல்லது 545 கிமீ. (நாகப்பட்டினம் 170, திருவாரூர்  20, தஞ்சாவூர்  45, புதுக்கோட்டை  39, இராமநாதபுரம் 271).
தமிழகத்தில் 442 மீனவக் குடியிருப்புகள், அதில் வடகடல் கரையோரத்தில் 224 மீனவக் குடியிருப்புகள் (நாகப்பட்டினம் 60, திருவாரூர் 04, தஞ்சாவூர் 27, புதுக்கோட்டை 34, இராமநாதபுரம் 99).
இந்த 224 குடியிருப்புகளிலும் 2,97,365 மீனவர் (நாகப்பட்டினம்1,10,000; திருவாரூர் 10,365; தஞ்சாவூர் 17,000; புதுக்கோட்டை12,000, இராமநாதபுரம் 1,48,000).
இந்த 2,97,365 மீனவரிடமும் 8,568 மீன்பிடி எந்திர வள்ளங்கள், 7,134 பாய்மரத் தோணிகள், 4,203 கட்டுமரங்கள்.
தமிழகத்தின் மொத்த மீன் உற்பத்தி ஆண்டுக்கு 360,000 மெட்றிக் தொன். வடகடலின் மொத்த மீன் உற்பத்தி 1,82,817 மெட்றிக் தொன் (நாகப்பட்டினம் 78,000; திருவாரூர் 2,000; தஞ்சாவூர் 10,900; புதுக்கோட்டை 8,500; இராமநாதபுரம் 83,417).
ஏறத்தாழ 72 இலட்சம் சதுரகிமீ. பரப்பளவுள்ள இந்தியப் பொருளாதார வலையத்துள், வட கடலின் 10,000 சதுரகிமீ. பரப்பளவுக்குள் முடங்கி மீன்பிடிக்கும் 3 இலட்சம் மீனவர்களையும் வட கடலுக்கு அப்பால் வடக்கு நோக்கி மீன்பிடிக்க அனுப்பவேண்டிய காலம் கனிந்துள்ளது.
வட கடலைத் தாண்டி, வடக்கே வங்காள விரிகுடாவுக்குள் மீன்பிடிக்க அவர்கள் போகாமல், கிழக்கே எல்லையைக் கடந்து வட கடலின் இலங்கை எல்லைக்குள் புகுந்து மீன் பிடிக்கிறார்கள்.
அவர்கள் வசமுள்ள 9,000 எந்திரப் படகுகள் ஒருநாளைக்குக் கடலில் தங்கும் வசதி கொண்டவை. மதியம் புறப்பட்டால் மறுநாள் காலை துறைக்குத் திரும்பும் வலு கொண்டவை. எனவே வட கடலின் ஆழமான கிழக்குக் கடலுள், இலங்கை எல்லைக்குள் மீன்பிடிப்பதை வழக்கமாக்கி உள்ளனர். இலங்கைக் கடற்படை இவர்களைத் தாக்குகிறது, சுட்டுக் கொல்கிறது, ஆனாலும் விடாமல் அங்கு செல்கிறார்கள், மீன்பிடிக்கிறார்கள்.
நாகப்பட்டினத்துக்கு நேர் கிழக்காக, இந்தியப் பொருளாதார வலையத்துள் 9 வலைகளை அளவோடு பயன்படுத்தினால் ஆண்டுக்கு 20,000 மெட்றிக் தொன் மீன் பிடிக்கலாம்.
கன்னியாகுமரிக்கு நேரே தெற்காகக் குமரித் தரவை பரந்து கிடக்கிறது. கடந்த நூறாண்டுகளாக, கொழும்பிலிருந்து வரும் இலங்கை இழுவைக் கப்பல்கள் இங்கே மீன் பிடித்து வருகின்றன. ஆண்டொன்றுக்கு 50,000 மெட்றிக் தொன் மீன்களை அள்ளிச் செல்கின்றன.
1976இன் இலங்கை இந்திய உடன்பாடு, 2000இன் பொருளாதார வலையம் பற்றிய உலக உடன்பாடு யாவும் இக் குமரித் தரவையை இந்தியாவின் எல்லைக்குள் தந்தபின்னரும் இலங்கைக் கப்பல்கள் இந்நாள்வரை குமரித் தரவைக்கு வந்து, சில நாள்கள் கடலில் தங்கி, இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றன.
வங்காள விரிகுடாவிலும் குமரிக் கடலிலும் இந்தியப் பொருளாதார வலையத்துள் வந்து இலங்கைக் கப்பல்கள் மீன் வளத்தை அள்ளிச் செல்கின்றன. அதே மீன்வளத்தைத் தமிழக மீனவர்கள் கொள்வதில்லை. ஏனெனில் அவர்களிடம் அதற்கான வசதிகள் இல்லை.
சில நாள்கள் கடலில் தங்கி மீன்பிடிக்கும் வசதியுடன், எரிபொருள், மின்சாரம், தொலைத்தொடர்பு, புவிநிலைஅறிகருவிபொழுதுபோக்குக்காணொலி, கேட்பொலி, உலக வானொலிதங்கும் வசதி, கழிப்பறை வசதி, சமையல் வசதி, சமைக்க மளிகைப் பொருள்கள், ஆழ்கடல் மீன்பிடி வலைகள், இழுவை வலைகள், பனித்தண் களஞ்சியங்கள், தப்ப மிதவைகள், தப்பப்படகுகள்,  என 15 அல்லது 20 மீனவர், மீனவர் தலைவர், கப்பல் ஓட்டுநர் தலைவர், எந்திரத் திருத்துநர் என மீன்பிடிக் கப்பல்கள் பத்து அல்லது பதினைந்தை இராமேச்சர மீனவர்களுக்குக் கொடுத்தால், அவர்கள் வட கடலுக்கு வடக்கே செல்வார்கள், பருத்தித் தரவையில் மீன் பிடிப்பார்கள்,  தெற்கே செல்வார்கள் குமரித் தரவையில் மீன் பிடிப்பார்கள். 
இத்தகைய கப்பல்கள் மட்டும் இருந்தால் போதுமா? மீன்பிடித் துறைமுகங்கள் வேண்டும். கொண்டு வரும் மீனைச் சேமிக்க அத்துறைமுகமருகே பனித்தண் களஞ்சியங்கள் வேண்டும். அங்கே கப்பல் திருத்தும் பணி மனைகள் வேண்டும். மீன்பிடியாளருக்குப் பயிற்சி வேண்டும்.
வடகலை விட்டு அக்கப்பல்கள் வெளியேற, வடக்கே கோடித் திடலிலும் தெற்கே சேதுத்திடலிலும் கால்வாய்களை ஆழமாக்கவேண்டும், தொடர்ந்து தூர்வாரவேண்டும்.
பருத்தித் தரவையும் குமரித் தரவையும் முதல்நிலை விரிவாக்கமே. தெற்கே இந்துப் பெருங்கடல் விரிந்திருக்கிறது. சுறா, சூரை மீன் வகைகள் மலிந்து கிடக்கின்றன.
பிரஞ்சு, யப்பானிய, தாய்வானிய தாய்க் கப்பல்களைச் சுற்றிச் சிறுகப்பல்கள் நிலைகொண்டு மீன்பிடிக்கின்றன. சூரை மீன் வளங்களை அள்ளிச் செல்கின்றன.
இவ்வளங்கள் யாவும் தமிழக மீனவர்களின் வேட்டைக் கடலாக மாறும் நாள்களை நோக்கிய திட்டங்களை வகுக்கவேண்டும். இந்தியப் பொருளாதார வலையத்தின் 72 இலட்சம் சதுரகிமீ. பரப்பளவு மட்டுமன்று, அதைத் தாண்டிய பொதுக் கடலாகிய இந்துப் பெருங்கடல் வளங்களும் தமிழக மீனவர்களுக்காகக் காத்திருக்கின்றன.
வட கடலுக்குள் முடங்கி, வாழ்வா சாவா என்ற வாய்ப்பான் பிழைப்பான் வாழ்வாதாரத்தை விட்டுநீங்கி, விரிந்து பரந்த கடல்வேட்டைக்காகத் தம்மைத் தயார் செய்துகொள்வதிலேயே தமிழக மீனவர்களின், சிறப்பாக வட கடல் மீனவர்களின் எதிர்காலம் தங்கியுள்ளது.

No comments:

Post a Comment