முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டிணன்


அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டிணன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
24.11.2011 காலை திருப்பூர் கிருட்டிணன் தொலைப்பேசியில் அழைத்தார். வெளிவந்த படைப்புகளில் மிகச் சிறந்த இரண்டனுள் தங்களது கட்டுரையும் ஒன்று எனக் கருதுகிறேன் என்றார். நன்றி என்றேன். பரமபத விளையாட்டுப் பற்றி எழுதியதைக் கட்டம் கட்டியுள்ளோம் என்றார். துணிச்சலாக எழுதினீர்களே என்றார். எழுதுகோலை எடுத்தாலே இணக்கம் காண எழுதுவோர், யாரையும் புண்படுத்தாது எழுவோர் பலரைக் காண்கிறேன். மிகச் சிலர் துணிச்சலுடன் எழுதுகிறார்கள். நீங்கள் சொல்ல வந்ததைத் துணிச்சலுடன் வாதங்களை ஒழுங்கமைத்துத் தந்துள்ளீர்கள் என்றார்.
9.9.2011 மாலை, சென்னை ஊடுலண்டுசு விடுதி. 2030 மணி. ஆர். எம். வீரப்பன் அவர்களுக்கு மணி விழா. நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்துகொண்டிருந்தேன். திருப்பூர் கிருட்டிணன் என்னைக் கண்டார். கைகளைப் பற்றினார், அன்பு பொழிந்தார். நலம் விசாரித்தார். அமுதசுரபி தீபாவளி மலருக்கு ஒரு கட்டுரை தாருங்கள் என்றார். முகத்தை முறிக்கக் கூடாது என நினைத்தேன். தருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.
வண்டியை ஓட்டி வரும்பொழுது எதை எழுதலாம் என அசை போட்டேன். இராயப்பேட்டை மணிக்கூண்டைத் தாண்டுகிறேன். ஒரு கருத்து வந்தது, மனத்தைத் தொட்டுச் சென்றது.1968 இரண்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுக் காலத்திலிருந்து நான் முன்வைத்து வரும் ஒரு கருத்து. இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றி எழுதக் கருதினேன்.
வீடு வந்தேன். தகவல்களைத் திரட்டினேன். 24, 25.9.201இல் பிரான்சில் நடக்கவிருந்த உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டுக்காக நான் எழுதிய தீர்மான வரிகள் எனக்கு உதவின. 2300 மணிக்குப் படுக்கப் போகமுன் கருத்துரையை எழுதிமுடித்தேன். 10.9.2011 காலை 0400 மணிக்கே எழுந்தேன். எழுதியதை மீள ஒருமுறை படித்தேன. தட்டச்சுப் பிழைகளை முடிந்தவரை செப்பனிட்டேன். மின்னஞ்லில் அமுதசுரபிக்கு அனுப்பினேன்.
சில நாள்கள் கழித்துப் பொது நிகழ்வு ஒன்றில் திருப்பூர் கிருட்டிணனைச் சந்தித்தேன். உடனே அனுப்பிவிட்டீர்களே, நன்றி என்றார். கட்டுரையின் உள்ளடக்கத்தைப் படிக்காமல் சொல்கிறாரே. படித்தால் வெளியிடமாட்டாரே என எண்ணிக்கொண்டேன். ஏனெனில் அவருடன் இஃது எனக்கு இரண்டாவது அனுபவம்.
1990களின் தொடக்கத்தில் தினமணி கதிர் ஆசிரியர் திருப்பூர் கிருட்டிணன். என் அலுவலத்தில் தமிழ்த் தட்டச்சாளர் மயங்கித் திணறினர். வைத்திருக்கும் தட்டச்சு எந்திரத்துக்கு ஒரு விசைப்பலகை. ஒளிஅச்சு எந்திரத்துக்கு ஒரு விசைப்பலகை. கணிணிக்கு மற்றுமொரு விசைப்பலகை. மேலும் பிற இடங்களில் விசாரித்தேன். பல்வேறு விசைப்பலகைகள் பல்வேறு தயாரிப்பாளர்களால். அனைத்துத் தகவல்களையும் திரட்டினேன், படங்களைத் தொகுத்தேன், வேறுபாடுகள் மலிந்த கணிணி விசைப்பலகைக்கு ஒரே வடிவமைப்புள்ள விசைப்பலகைத் தராதரம், உலகத் தராதரம் வேண்டுமென்ற வாதம். கட்டுரை தட்டச்சானது.
உச்சிவெயிலில் தினமணி அலுவலகம் சென்றேன். தினமணி கதிர் ஆசிரியர் திருப்பூர் கிருட்டிணன் மேசையில் நான். என் கட்டுரையைக் கொடுத்தேன். முன் அறிமுகமில்லாத காலம். வாங்கினார், பார்த்தார். பார்க்கிறேன் என்றார்.
அதே கட்டுரை கோலாலம்பூர் மலேசிய நண்பன் இதழில் வெளிவந்தது. கொழும்பு வீரகேசரி இதழில் வெளிவந்தது. தமிழ்நாட்டில் வெளிவரவில்லை. சிங்கப்பூரில் இருந்து கோவிந்தசாமி என்னை அழைத்தார். என் கட்டுரை காலத்துக்கு ஏற்ற தேவை என்றார்.
அவரது முயற்சி மீநிற்க, 1999 இரண்டவது தமிழ் இணைய மாநாட்டில், சென்னையில் தமிழ் வழங்கும் அரசுகளின் பேராளர் முன்னிலையில் தமிழ்99 விசைப்பலகை, கணிணிக்கு ஒருங்கிணைந்த விசைப்பலகையாயிற்று. பொன்னவைக்கோ தலைமையில் அமைந்த மாநாட்டு விசைப்பலகைக் குழுவில் நானும் இருந்து தர ஒருமைக்கு ஒத்துழைத்தேன் என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
அமுதசுரபி தீபாவளி மலர்க் கட்டுரைக் கருத்துக்கும் அமைப்பு வடிவம் கொடுக்கும் நாள் வரலாம். திருப்பூர் கிருட்டிணனுக்கு உலகத் தமிழர் நன்றி சொல்வர்.

No comments:

Post a Comment