முகப்பு

முகப்பு

செய்திகள்

செய்திகள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

சச்சி பற்றிய ஆக்கங்கள்

நிழற்படம்

நிழற்படம்

காணொலி

காணொலி

நேர்காணல்கள்

நேர்காணல்கள்

ஒலிவெளி

ஒலிவெளி

Friday, May 18, 2012

ஆங்கிலேயரும் கியூபெக்குப் பிரஞ்சுக்காரரும் காட்டும் வழி


ஆங்கிலேயரும் கியூபெக்குப் பிரஞ்சுக்காரரும் காட்டும் வழி
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

தமிழ் கூறும் நல்லுலகம் படிப்படியாகத் தமிழர் அல்லாதோரின் ல்லுலகமாகிறது.
போரில் வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு.
ஈழத்தில் நடந்த நான்காவது ஈழப் போர் வைகாசி 2042இல் தோல்வியில் முடிவடைந்தது. அத்தோல்வியை அடுத்து ஈழத் தமிழரின் பராம்பரியத் தமிழ்த் தாயகத்தில், தமிழரல்லாதவரின் கை மேலோங்கி, சிங்கள மேலாட்சி நடைபெறுகிறது.
வடவேங்கடம் தென்குமரி ஆயிடும் தமிழ்கூறும் புதுச்சேரி உள்ளிட்ட தமிழகத் தமிழர் தாயகத்திலும் தமிழரல்லாதோரின் கை மேலோங்கி உள்ளது.
போரில் தோல்வியால் அல்ல, இந்திய ஒன்றியத்தின் பகுதியாகத் தமிழகமும் புதுச்சேரியும் இருப்பதால்.
தமிழ் மொழியைப் படிக்காமல், தமிழ் மொழியை அறிந்திராமல், தமிழர் பராம்பரியத் தாயகங்களில் எவரும் நுழையலாம், வாழலாம் என்ற அரசியற் சூழ்நிலை, தமிழருக்கு உலகில் தனியான நிலப்பரப்பு, பராம்பரிய நிலப்பரப்பு இல்லாமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தை, ஏக்கத்தைத் தாய்நிலத் தமிழருக்குத் தருவது இயல்பு.
பராம்பரிய நிலப்பகுதிக்குள் எவரும் குடிவரலாம். வரமுன்பு அந்த நிலப்பகுதியின் மொழியை நன்றாகப் பயின்றிருக்கவேண்டும் என்ற கொள்கையைப் பிரித்தானிய அரசு சட்டமாக்கி உள்ளது. ஆங்கிலேய மொழி பயிலாத நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு எக்காரணம் கொண்டு குடிபெயர்ந்து வாழ்ந்து குடியுரிமை பெற விழையும் எவரும் நுழையுமுன்பே ஆங்கிலத்தைப் பயின்று குறிப்பிட்ட தகுதி பெற்றிருக்கவேண்டும் என்ற சட்டம் பிரித்தானியாவில் உள்ளது.  
அந்தச் சட்டம் குடும்பங்களைப் பிரிக்கிறது, ஆங்கில மொழிதெரியாது என்பதற்காகப் பிரித்தானியரைத் திருமணம் செய்யும் ஆணோ பெண்ணோ, குடும்பத்துடன் இணைய முடியாமலுள்ளது, இஃது அடிப்படை மனித உரிமை மீறலாகும் என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.
ஆங்கிலேயரின் பராம்பரிய நிலப்பகுதிக்குக் குடிவரும் எவருக்கும் ஆங்கில மொழியை நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும் என்ற பிரித்தானியச் சட்டத்தை ஆதரித்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
A government rule is in place which legitimizes that foreign nationals must learn English before they are allowed to come and live with their British spouses. “The new rule impacts on the Article-8 rights of the claimants, [the right to a family life] but its aims, to promote integration and to protect public services, are legitimate aims,” என அரசின் சட்டத்தை ஆதரித்துப் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் வழங்கியுள்ள நேற்றைய (17.12.2011) தீர்ப்பு, தேசிய இனங்கள் தத்தம் பராம்பரிய வாழ்விடங்களில் தத்தம் மொழிகளுடன் மட்டுமே வாழவேண்டும் என்ற கொள்கைக்கு உரமூட்டியுள்ளது.
கியூபெக்கு மாநிலம் கனடா நாட்டின் பகுதி. பிரஞ்சு அந்த மாநிலத்தின் மொழி. ஏனைய மாநிலங்களில் ஆங்கிலமே மொழி. எனினும் கியூபெக்கின் மொழிச் சட்டம் பிரஞ்சு மொழியை அனைத்து மட்டங்களிலும் கட்டாயமாகப் பயன்படுத்தவேண்டும் என்கிறது.
மாநில அரசு மற்றும் கூட்டரசு நிறுவனங்கள் பிரஞ்சு மொழியிலேயே செயலாற்றவேண்டும், கூட்டரசுடன் பிரஞ்சு மொழியில் தொடர்பு கொள்ளவேண்டும், ஒப்பந்தங்கள் உடன்பாடுகள் பிரஞ்சு மொழியில் மட்டும், பெயர்ப் பலகைகளில் பிரஞ்சு மொழி மட்டும், அறிவிப்புகள், விளம்பரங்கள், விளம்பரத் தட்டிகள் பிரஞ்சு மொழியில் மட்டும், அலுவலகங்களுள் பிரஞ்சு மொழியில் மட்டுமே உரையாடல், வணிக நிறுவனங்கள் பிரஞ்சு மொழியில் மட்டும் வாடிக்கையாளருடன் தொடர்பு, எனப் பின்வருமாறு சட்டங்கள் உள. 
The law proclaimed French the official language in Quebec, set up a Régie de la langue française to supervise the application of the bill, mandated that all public institutions had to address the public administration in French, made  French  the official language of contracts, forced corporations to give themselves a French name, and to advertise primarily in French in Quebec, as well as to seek a certificate of francization that could only be obtained when it was demonstrated that the business could function in French and address its employees in French. 
The bill, as it was passed in the summer of 1977, proclaimed French as the official language in Quebec for just about every facet of life in the province: government, judicial system, education, advertising, business, contracts, etc. For example, the bill required that all advertising on billboards be done in French only and that all commercial signs in business establishments be in French alone. All public administrations and businesses had to address their employees in French. All government agencies were directed to use the Official language in their dealings with corporations and other governments in Canada. Government Ministries and Agencies, as well as professional associations in Quebec, were to be known by their French name. 
அங்கே திரையிடப்படும் எந்த மொழித் திரைப்படத்தையும் பிரான்சில் வழங்கும் பிரஞ்சு மொழியில் குரல்மாற்றாது, கியுபெக்கின் வட்டார வழக்குப் பிரஞ்சு மொழியில் குரல்மாற்ற வேண்டும் என்றும், ஓடும் உரையாடல் எழுதவேண்டும் என்றும் சட்டம் உண்டு.
French dubbing from France tends to be irritating for the average Quebecer, as the accent is very different and more ''imposing'', I would say and they tend to use words that are only used in France, whereas a Quebec-dubbed version will use standard French words that any French speaker would understand. But if for example there's a movie scene when there's a joke being told, most of the time Quebecers won't get it, since the French have a different sense of humour. 
பராம்பரிய நிலம், ஒரே மொழி, ஒரே பண்பாடு என்பதால் தேசிய இனங்கள் அடையாளம் காண்கின்றன.
பிரித்தானியா ஆங்கிலேயரின் பராம்பரிய வாழ்விடம். கனடாவின் கியூபெக்கு மாநிலம், பிரஞ்சு மொழியினரின் 200 ஆண்டுகளுக்கு ம் கூடுதலான பராம்பரிய வாழ்விடம்.
அங்குள்ள சட்டங்கள் அந்தந்தத் தேசிய இனங்களுக்குப் பாதுகாப்பு வழங்குகின்றன.
தமிழருக்குப் பராம்பரிய நிலங்கள் ஈழமும் தமிழ்நாடும். வடவேங்கடம் முதலாகக் கதிர்காமம் ஈறாக, மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்கே, வடக்கிலிருந்து தெற்குவரை வங்கக் கடலோரம் தொடரும் நிலப்பகுதியில், (இடையில் ஆழமற்ற கடல், தமிழர் கடல், இருந்தாலும்) தமிழ்த் தேசியத்தைக் காக்க ஆங்கிலேயரும் கியூபெக்குப் பிரஞ்சுக்காரரும் காட்டிய வழியே தமிழருக்கும் இன்றைய அரசியற் சூழ்நிலையில் பொருந்தும்.

No comments:

Post a Comment